முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்த வருடம் அஜித் படம் இல்லை..? தாமதமாகும் ஷூட்டிங்.. ரசிகர்கள் வருத்தம்!

இந்த வருடம் அஜித் படம் இல்லை..? தாமதமாகும் ஷூட்டிங்.. ரசிகர்கள் வருத்தம்!

அஜித்குமார்

அஜித்குமார்

AK 62 : அடுத்து அஜித்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தடம், தடையறத் தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவின.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்தது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும், அரவிந்த்சாமி, சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இதற்கிடையே, தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும் வேறு ஒரு இயக்குநர் அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. படத்தின் இருந்து விலகியதை விக்னேஷ் சிவனும் மறைமுகமாக உறுதிப்படுத்தினார். அடுத்து அஜித்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், தடம், தடையறத் தாக்க, மீகாமன், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவின.

22 ஆண்டுகளாக லியோ, ரோலெக்ஸை ஃபாலோ பண்ணும் ஏஜெண்ட் டீனா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே..!

top videos

    படத்தின் பூஜை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இப்படி எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அஜித்தின் தந்தை உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக அஜித் வீட்டில் இழப்பு ஏற்பட்டதால் அவர் படம் தொடர்பான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடுவதிலும் தாமதம் ஆகும் எனவும், படத்தின் ஷூட்டிங்கும் திட்டமிட்டபடி தொடங்காது என கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலிஸ் செய்யலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த ஆண்டுதான் அஜித்தின் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Ajithkumar