முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எங்கே போனார் கனகா? பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன? வைரலாகும் செய்தி!

எங்கே போனார் கனகா? பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன? வைரலாகும் செய்தி!

கனகா

கனகா

சினிமாவில் கோலோச்சிய கனகா நாளடைவில் சினிமாவை விட்டே காணாமல் போனார். அவர்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே பல்வேறு வழிகளில் பரவின.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1990களில் மலையாள சினிமாவை ராஜ்ஜியம் செய்த நடிகை கனகா. அவரைப்போல வேறு யாரும் உண்டா என்பது சந்தேகமே. நடிகை தேவிகாவின் மகள் கனகா, நாளடைவில் சினிமாவை விட்டே காணாமல் போனார். அவர்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே பல்வேறு வழிகளில் பரவின.

அவர்கள் போதைக்கு அடிமையாகி மனநோய் வரை இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. சமீபத்தில் அவரது வீடு தீப்பிடித்து எரிந்தது பெரிய செய்தியாக பரவியது. அப்போது கனகாவை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவரின் அனுபவம் வெளியிடப்பட்டது. சென்னை ஆர்.ஏ. புரத்தில் பூட்டிய வீட்டை அடையும் போது கனகாவின் உரத்த பேச்சு மட்டுமே கேட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமல் இருந்த அந்த வீட்டின் வாயிலில் கனகா மற்றும் அவரது தாயார் பெயர்கள் எழுதப்பட்டிருந்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகா போனில் யாரிடமோ தமிழில் பேசிக்கொண்டிருந்ததாக அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து குறிப்பிட்டுள்ள செய்தியாளர், ''வீட்டில் காலிங் பெல் வேலை செய்யவில்லை. வீட்டின் ஓரத்தில் தூசி படிந்த கார்கள் மட்டுமே இருந்தன. காவலாளி என்று யாருமே இல்லை. கதவுகள் மூடப்பட்டிருந்தது. வீடும், வீட்டு வாசலும் குப்பையாக இருந்தது.

சமீபத்தில் வீடு தீப்பற்றி எரிய பூஜை அறையில் பற்றிய தீயே காரணம் என பக்கத்து வீட்டு கூறினார்.கனகாவுக்கு உதவியாளர் ஒருவர் இருப்பதாகவும், அவர் சபரிமலை சென்றபோதுதான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

கனகா குறித்து பேசிய அவரது உதவியாளர், கனகா தனது நெருங்கிய உறவினர்களின் மோசமான நடத்தையால் யாருடனும் நெருங்கி பழகவில்லை. அவர் எந்த வித உதவி கேட்டாலும் நான் செய்துகொடுக்கிறேன். ஒருமுறை வீட்டிற்கு பெயின்ட் அடிக்கலாம் என்று சொன்னேன். அவர் பார்க்கலாம்' என்று பதிலளித்தார். அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அவர் வாழ்க்கையை வாழ விடுங்கள் என்றார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actress