அரசு கல்லூரியில் 4,136 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் என்ற சமூக வலைத்தளங்களில் பரவும் அறிவிப்பாணை போலியானது என்றும் அதனை வெளியிட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்துள்ளது. உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பலரும் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பெயரில் தேர்வு வாரியம் வெளியிட்டது போல 4,136 உதவி பேராசியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியானது. ஆனால், இந்த அறிவிப்பானைப் போலியானது என்றும் தாங்கள் அப்படியொரு அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
Also Read : 100 நாள் வேலைத் திட்டம்: மார்ச் 31ம் தேதியே கடைசி.... இதை செய்யலனா.... சம்பளம் இல்லை
தாங்கள் வெளியிடாத நிலையில் வேறு யாரோ தங்கள் பெயரில் அறிவிப்பை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், போலியாக வாரியத்தின் பெயரில் தவறாக அறிவிப்பு வெளியானது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு வாரத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assistant Professor, Fake News, TRB