முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / “புத்தகம் பார்த்து விடை தெரிந்துகொண்ட தேர்வர்கள்...” - டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்துசெய்யக் கோரி வழக்கு...!

“புத்தகம் பார்த்து விடை தெரிந்துகொண்ட தேர்வர்கள்...” - டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்துசெய்யக் கோரி வழக்கு...!

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu |

குரூப் 2 முதன்மை தேர்வினை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய  செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்த TNPSC குரூப் 2 முதன்மை தேர்வினை ரத்து செய்ய வேண்டும். விரைவில் மறு தேர்வு நடத்த. உத்தரவிட வேண்டும் என கோரி  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் க.கருப்பையா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இதையும் வாசிக்க: COMPETITIVE EXAMS : உங்களுக்கு எந்த அரசு தேர்வு செட் ஆகும்? இதோ உங்களுக்கான வழிகாட்டி!

அதில், “பதிவெண் மாறியதால், தாமதமாக தேர்வு தொடங்கியதால், தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள், மொபைல் போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு விடைகளை கேட்டது மற்றும் புத்தகங்களை பார்த்து விடைகளை தெரிந்து கொண்டனர்”  என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், TNPSC செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 26ம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

top videos
    First published:

    Tags: Exam, TNPSC