முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு..? சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு..? சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், தேர்வு எழுதியவர்களில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது - எடப்பாடி பழனிசாமி

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்திய குரூப் 4 தேர்வு தொடர்பாக  சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "  தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், தேர்வு எழுதியவர்களில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி தவறு ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரம் இன்றி  எதிர்க்கட்சி தலைவர்  பேசி இருக்கிறார். எனவே அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும் "என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம், 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, எழுத்துத் தேர்வு  2022ம்ஆண்டு  ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், கடந்த 21ம் தேதி, குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டன.

இதையும் வாசிக்க: குரூப் 4, நில அளவளர் தேர்வுகளில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி அளித்த விளக்கம் இதோ!

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2,000 பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியன .மேலும், மாநில அளவில் முதல் 11 இடங்களில் 6 இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

top videos

    ஏற்கனவே, கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, இந்த முறையும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    First published:

    Tags: Tamil Nadu Government Jobs, TN Assembly, TNPSC