முகப்பு /வேலைவாய்ப்பு /

மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - யாரெல்லாம் பங்கேற்கலாம்?

மதுரையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - யாரெல்லாம் பங்கேற்கலாம்?

ஊர்க்காவல் படை

ஊர்க்காவல் படை

மதுரை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளர்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது. 

  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலர்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றது. இது குறித்து மதுரை மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மதுரை மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்கு உட்பட்ட சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண்கள் மற்றும் பெண்கள் எந்தவித குற்றப் பின்னணி இல்லாதவராகவும், ஜாதி மதம் அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசு ஊழியராக இருந்தால் தங்கள் துறை சார்ந்த அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்றுக் கொண்டு இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் கல்வி வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றுதலுடனும் வரவேண்டும்.

இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை மதுரை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஊர் காவல் படை அலுவலகத்தில் 20.4.2021 முதல் 22.4.2023 வரை மூன்று நாட்கள் இலவசமாக நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த நபரை இத்தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Local News, Madurai