முகப்பு /வேலைவாய்ப்பு /

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்... 2,000 இளைஞர்களுக்கு உடனடி பணி ஆணை..!

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்... 2,000 இளைஞர்களுக்கு உடனடி பணி ஆணை..!

X
புதுவையில்

புதுவையில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆனை பெற்ற 2000 இளைஞர்கள்

Puducherry News | வேலைவாய்ப்பு முகாமில் 35-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி வேலைவாய்ப்பு துறை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு முகாம் மூலம் ஆட்களை பணிக்கு அமர்த்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பகம் சார்பில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 35-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 2000-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை செயலர் முத்தம்மா, துணை ஆணையர் ராகினி, மற்றும் பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ராஜ சுகுமார், வேலைவாய்ப்பு அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

First published:

Tags: Local News, Private Jobs, Puducherry