முகப்பு /வேலைவாய்ப்பு /

தகுதிக்கேற்ற வேலை : தென்காசியில் ஏப்.28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

தகுதிக்கேற்ற வேலை : தென்காசியில் ஏப்.28-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

Tenkasi | இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது decksjoblar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 28.04.2028 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்திலேயே வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது decksjoblar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ அல்லது 04633-213179 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tenkasi