முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இளைஞர்களே அரிய வாய்ப்பு... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க..

இளைஞர்களே அரிய வாய்ப்பு... சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க..

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 24 ஆம் நாள் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கிண்டியில் மார்ச் 24 ஆம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2வது அல்லது 3வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். கிண்டி - ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

Also Read : TNPSC தேர்வர்களுக்கு நற்செய்தி!.... குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

இம்முகாம் வாயிலாகப் பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் நிறுவனங்கள் மற்றும் கலந்துகொள்கிறவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் தமிழ்நாடு தனியார்த் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Employment, Employment camp, Private Jobs