முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்...

தமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்...

அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu |

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி - வழக்குப் பணியாளர்(Case Worker); காலிபணியிடங்கள் -6

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,

உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

பாதுகாப்பாளர்: (Security Guard) (காலிப்பணியிடம் 1) 

மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1 ):

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும்.

வேலைவாய்ப்பு அறிவிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

top videos

    விண்ணப்பம் செய்வது எப்படி? விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 25.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது chndswosouth@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை கேட்டுக்கொள்கிறார்.

    First published:

    Tags: Recruitment, Tamil Nadu Government Jobs