திருச்சி மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் வேலை செய்ய மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கு 150 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதற்கான தகுதிகளும் கீழே அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பழைய காமராஜர் அரசு தலைமை மருத்துவமனையில், 108 ஆம்புலன்சில் வேலை செய்ய மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் வெள்ளிக் கிழமை நாளை நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் தேர்வுக்கு 19 முதல் 30 வயதுக்குள்ளும், பி.எஸ்சி. நர்சிங், டி.எம்.எல்.டி., ஏ.என்.எம். படித்து இருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ் படிப்புகளில் ஏதாவது ஒருபிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ALSO READ | திருச்சி மக்களே உஷார்.. இனி ரோட்டுலா போஸ்டர்ஸ் ஒட்டக்கூடாதாம்..!
24 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் 12 மணிநேர இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறைகளில் தமிழ்நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
தேர்வுக்கு வருபவர்கள் கல்வித்தகுதி, ஓட்டுனர் உரிமம், முகவரி சான்று, அடையாளச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambulance, Job, Local News, Trichy