முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி?... வெளியான அதிர்ச்சித் தகவல்.. தேர்வர்கள் புகார்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி?... வெளியான அதிர்ச்சித் தகவல்.. தேர்வர்கள் புகார்..!

மாதிரி படம்

மாதிரி படம்

tnpsc group 4 result | குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் சில குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 7 மாதங்கள் காலதாமதத்திற்கு பின்னர் நேற்று வெளியிடப்பட்டன.  18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதி இருந்தனர். முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் சில குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக ஒட்டுமொத்தமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வரின் (overall rank - மற்றும் (communal rank-) இரண்டும் குறைந்த மதிப்பெண் பெற்றவரை காட்டிலும் குறைய வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் தரவரிசையில் அதிக மதிப்பெண் பெற்றவர் முன்னணி இடத்தை பெற முடியும். மாறாக அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்களை காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற தேர்வரின் ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் சமூக ரீதியிலான ரேங்க் குறைந்துள்ளது.

இதனால் அதிக மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் பின்னணியிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர் தரவரிசையில் முன்னணி இடம் பிடிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவே இது நிகழ்ந்துள்ளதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் தேர்வர்களின் பதிவெண்ணுடன் உடன் கூடிய தரவரிசை பட்டியலை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு வந்தது. கடந்த 2019-ல் குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பதிவெண் உடன் கூடிய தரவரிசை பட்டியலை வெளியிடுவதையும் அரசு பணியாளர் தேர்வாணையம் நிறுத்தியுள்ளது. இது அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புவதாகவும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக கூடியவர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாயம் வாசிக்க: TNPSC Group 4 Results: குரூப் 4 பணியிடங்கள் எப்படி நிரப்பப்படும்? உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

7 மாதங்கள் தாமதமாக முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அதிலும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கின்றது.

First published:

Tags: Government jobs, Group 4, Tamil Nadu Government Jobs, TNPSC