மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer/Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மாலை 6 மணியுடன் (17-03-2023) முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால இடைவெளி இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிடங்கள் : மொத்தம் 577 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு நிர்ணயித்துள்ள 8-வது நிலையிலான ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு: Enforcement Officer/Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியலின சாதிகள்/ பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வுக்கு 25 சதவிகித விழுக்காட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு: பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட கொள்குறி வினாக்களைக் கொண்டதாக எழுத்துத் தேர்வு இருக்கும்.
தேர்வு நேரம் : இரண்டு மணி நேரம். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3-ல் 1 பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
பாடத்திட்டம்: ஆங்கில அறிவு, இந்திய சுதந்திர போராட்டம், சமீப நிகழ்வு, இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், கணக்கு பதிவியல் கோட்பாடு( General Accounting Principles), தொழிற்துறை தொடர்புகள் மற்றும் தொழிலாளர் சட்டம் (Industrial Relations & Labour Laws) பொதுஅறிவியல், மனக்கணக்கு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். கணக்கு பதிவியல் கோட்பாடு தவிர்த்து பார்த்தால், இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும், ஐஏஎஸ் , குரூப் 1, குரூப் 2, SSC போன்ற தேர்வுகளோடு அதிகம் ஒத்து போகிறது. எனவே, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பம் செய்வது எப்படி? www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணைய வழியில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். வேறு எவ்வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விளம்பர அறிவிக்கையை கீழ்கண்ட இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு RECRUITMENT SPECIAL ADVERTISEMENT NO.51/2023
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Jobs, UPSC