முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வெளியானது UGC -NET தேர்வு முடிவுகள்... செக் செய்வது எப்படி?

வெளியானது UGC -NET தேர்வு முடிவுகள்... செக் செய்வது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

ugcnet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ugcnet.nta.nic.in மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நெட் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் 1-ல் 50 கேள்விகள் கேட்கப்படும். இது, விண்ணப்பதாரரின் ஆராய்ச்சி மனப்பான்மையை சோதிக்கும் வகையில் இருக்கும். இரண்டாவது தாளில் 100 கேள்விகள் கேட்கப்படும். இதில், விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்ற தேர்வாளர்களில், இரண்டு தாள்களின் மொத்த மதிப்பெண்களைப் பயன்படுத்தி ஒரு தகுதி பட்டியல் பாடவாரியாகவும் இனவகை வாரியாகவும் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய: 

ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்;

UGC NET DECEMBER 2022 SUBJECT/CATEGORY WISE CUTOFF PERCENTILE

UGC NET DECEMBER 2022 SUBJECT/CATEGORY WISE CUTOFF MARKS

top videos

    Final Answer Keys  என்ற இணைப்பின் மூலம் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    First published:

    Tags: UGC