தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், 3552 காலிப் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறப்புக் காவலர், தீயணைப்பு வீரர் பதவிகளுக்கான இறுதி கட்ட உத்தேச தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையத்தின் https ://tnusrb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
படி -1 : இறுதி கட்ட தகுதி பட்டியலை பார்க்க https://www.tnusrb.tn.gov.in/என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.
படி -2 : முகப்பு பக்கத்தில் Common Recruitment of Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen 2022 என்ற பிரிவில் Final Provisional Selection list (Enrolment No. wise) மற்றும் Final Provisional Selection list (Roster wise) என்ற பகுதியை க்ளிக் செய்து பார்க்கலாம்.
முன்னதாக, 3552 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு, உடல்திறன் போட்டிகள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்த நிலையில் இறுதி தகுதி உத்தேச பட்டியலை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.