முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஷாக்: தமிழ் மொழித் தாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தோல்வி

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடந்து  முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு  2022ம்ஆண்டு ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர்.

குரூப்-4 தேர்வு ஒற்றைத் தேர்வு தாள் கொண்ட தேர்வாகும். பகுதி 'அ '-வில் உள்ள கட்டாயத் தமிழ் பகுதியில் 100 வினாக்களும், பகுதி 'ஆ' வில் பொது அறிவு பாடத்தில் 75 வினாக்களும், கணித அறிவில் பாடத்தில் 25 வினாக்களும் இடம்பெற்றன. இதில், பகுதி 'அ' வில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% ( அதவாது 60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பகுதி 'ஆ'-விற்கான விடைகள் திருத்தப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய, குரூப் 4 தேர்வுகளில், கட்டாய மொழிப் பாடங்களில் தமிழ் (அ) ஆங்கிலம் என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை தமிழ் மொழி மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக அறிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடா? அமைச்சர் பிடிஆர் விளக்கம்

இதற்கிடையே, கடந்த மார்ச் 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இருப்பினும்,  பெரும்பாலான தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என புகார் அளித்து வந்தனர்.

இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு..? சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்

top videos

    இந்நிலையில், 5 லட்சத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தாளில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இத்தகைய தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

    First published:

    Tags: TNPSC