முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஓரிரு நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு... தேர்வர்கள் புதிய கோரிக்கை!

ஓரிரு நாளில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு... தேர்வர்கள் புதிய கோரிக்கை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டது அப்போது கூட பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

டிஎன்பிஎஸ்சி குரூப்-4  பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போட்டி தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், குரூப் 4 (TNPSC Group 4) பணியிடங்களுக்கான தேர்வு 3 வருடங்கள் கழித்து கடந்த 24 ஜூலை 2022 அன்று முடிந்தது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கு 7301 பணியிடங்களே வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் பணி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் 15 ஆயிரம் என்பது மேலும் அதிகமாகியுள்ளதால் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

அரசு பணியே உயிர் என்று தன் உயிர் மூச்சாக கொரோனா பெருந்தொற்று காலத்தை கடந்தும் இதையே நம்பி காத்துக்கொண்டு இருக்கும் எங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.

இதையும் வாசிக்க: தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டது அப்போது கூட பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2018ல் 11800 ஆகவும் 2019-ல் 9500 ஆகவும் இருந்தது.

தற்போது தேர்வின் வினாத்தாள் கடினமாகவும் தவறான சில கேள்விகளும் இடம் பெற்றதால் கட்ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் கடினமாக படித்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு 7, 031 என்பதை மேலும் 8 ஆயிரம் அதிகரித்து 15,000 பணியிடங்கள் வெளியிட வேண்டும் என்று போட்டி தேர்வர்கள் பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் (Group 4 Exam Results):  கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை நடத்தியது. 7,301 காலிப்பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22 லட்சம் பேர் (22,02,942) விண்ணப்பித்திருந்தனர். 18 லட்சம் பேர் (18,36,535) தேர்வில் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் இம்மாத  இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி முன்னதாக தெளிவுபடுத்தியிருந்தது. எனவே, தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில், குரூப் 4 காலிப் பணியிடங்களை 15,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்கள் புதிய கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: TNPSC