சமீபத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட குரூப் 4 தேர்விலும், 1089 காலிப் பணியிடங்களுக்கான நில அளவையர் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 24ம் தேதி 10,117 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில், ஒட்டுமொத்த தரவரிசையிலும், இடஒதுக்கீடு தரவரிசையிலும் தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், டைபிஸ்ட் பிரிவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் தரவரிசையில் முன்னனியில் வந்தது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், " குரூப் 4 ஆள்சேர்க்கை அறிவிப்பின் போதே தட்டச்சு பிரிவில் இரண்டு higher முடித்தவர்களுக்கே தேர்வு முடிவுகளில் முன்னூரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும், அந்த வகையில் மதிப்பெண் குறைந்தவர்கள் தட்டச்சர் பிரிவில் கிடைத்த முன்னூரிமையால் தரவரிசையில் முன்னனி இடம் பிடித்ததாக விளக்கமளித்துள்ளது.
கட்டாயம் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி.. மற்ற தேர்வர்கள் அதிர்ச்சி...
அதேபோன்று, நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த இருப்பதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
மேலும், குரூப் 4 தேர்வில் 2,000 ஆயிரம் பேர் ஒரே பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ளதாக அந்த பயிற்சி மையம் தெரிவித்துள்ள விவகாரம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ள இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC