முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முடிவுகள் எப்போது..? வெளியானது புதிய அப்டேட்...!

TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு முடிவுகள் எப்போது..? வெளியானது புதிய அப்டேட்...!

மாதிரி படம்

மாதிரி படம்

TNPSC ANNUAL RECRUITMENT PLANNER | குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குரூப் 4 தேர்வு நடைபெற்று 7 மாதங்களைக் கடந்தும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால், உடனடியாக முடிவுகளை அறிவிக்கக் கோரி சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இம்மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்திய 14 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் மாதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தால்தான் இனி சம்பளம்: மத்திய அரசு

மேலும், தலைமைச் செயலகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தியாளர் பணியிடத்திற்கான வாய்மொழி தேர்வுக்கான முடிவுகளும், ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு முடிவுகளும் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஎன்பிஎஸ்சியின் இந்தாண்டுற்கான வருடாந்தர திட்டம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யவும்.

First published:

Tags: Government jobs, Tamil Nadu Government Jobs, Tamilnadu govt, TN Govt, TNPSC