முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய தேர்வு அட்டவணை: தேர்வர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய தேர்வு அட்டவணை: தேர்வர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா?

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Updated Annual Planner: இந்த திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

TNPSC Updated Annual Planner: 2023ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. புதிய தேர்வு அட்டவணையில், கூடுதலாக பல்வேறு பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023-ம் ஆண்டு போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வெளியிட்டது. அந்த ஆண்டுதிட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 11 பதவிகளுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இவை, பெரும்பாலும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்தன.  மேலும், இந்த திட்டத்தில் குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், இதற்கான தேர்வு 2024 மே மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், குரூப் 2/2ஏ, குரூப் 1 தேர்வுகள் குறித்த அறிவிப்பு இதில் இடம்பெறவில்லை. 

லட்சக்கணக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இந்த தேர்வு திட்டம் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. மேலும், டிஎன்பிஎஸ்சி உடனடியாக தேர்வு அட்டவணையை தற்போதுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், சில தினங்களுக்குப் பிறகு(டிசம்பர் 21ம் தேதி)  திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டது. இதில், குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், முதற்கட்ட தேர்வு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மீண்டுமொருமுறை திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 17ம் தேதி வெளியிட்டது. அதில்,  புதிதாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER-2023 (UPDATED)

புதிதாக சேர்க்கப்பட்ட தேர்வுகள்:

உதவி சிறை அலுவலர் (i. ஆண்கள்/ii. பெண்கள்);

உதவி மேலாளர்(சட்டம்) அரசு போக்குவரத்து கழகம்; 

ஆராய்ச்சி உதவியாளர்(புள்ளியியல் / பொருளாதாரம் / புவியியல் / சமூகவியல்) தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி; 

உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து ஆங்கிலம்); 

தொழில்நுட்ப பதவிகள் (10ம் வகுப்பு/ஐடிஐ/ பட்டயப்படிப்பு); 

தொழில்நுட்ப பதவிகள் (வணிகவியல்/CA/CMA

(ICWA);

மருந்து சோதனை ஆய்வகக் கூட்டத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் (தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணி)

விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர்;

தொழில்நுட்ப பதவிகள்( இளங்கலை பட்டத்துடன் கூடிய பணி சார்ந்த குறிப்பிட்ட கல்வித் தகுதிகள்);

 உதவி வேளாண்மை அலுவலர்/ உதவி தோட்டக்கலை அலுவலர்;  

ஆய்வக உதவியாளர் (தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி);

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்;

கணக்கு அதிகாரி/ கணக்கு அலுவலர்;

இளநிலை அறிவியல் அலுவலர்;  

ஆகிய பல்வேறு துறை சார்ந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023ம் ஆண்டுக்குள் குரூப் 4 தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். குரூப் 2/2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற லட்சக்கணக்கான தேர்வர்களின் கோரிக்கைகள் இந்த திருத்தப்பட்ட அட்டவணையில் இடம்பெறவில்லை.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC