முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / உடனே அப்ளை பண்ணுங்க: இந்து அறநிலையத் துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்

உடனே அப்ளை பண்ணுங்க: இந்து அறநிலையத் துறையில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும்

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் மே மாதம் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu |

Tamil Nadu Government Jobs : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  எதிர்வரும் மே மாதம் 11ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகாலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்கல்வித்தகுதி
தட்டச்சர்118,500-58,600பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான  கல்வித்தகுதி2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவி மின் பணியாளர்116,600-52,400மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காவலர்415,900-50,400தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
பெருக்குபவர்115,900-50,400 தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: 

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையராகவும் இருக்க வேண்டும்;

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;  

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy Only) பெற்று அனுப்பப்பட வேண்டும்;

தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்த பதவிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கதமிழ்நாடு அரசு சேவை மையத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்...

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

top videos

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஐம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் -  என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும்.

    First published:

    Tags: Recruitment, Tamil Nadu Government Jobs