முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வட்டார இயக்க மேலாளர் பதவி... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்...!

வட்டார இயக்க மேலாளர் பதவி... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்...!

மாவட்ட வேலைவாய்ப்பு செய்தி

மாவட்ட வேலைவாய்ப்பு செய்தி

Tenkasi District Recruitment: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office இல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணினி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

  • Last Updated :
  • Tenkasi, India

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 2 வட்டார இயக்க மேலாளர்கள் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வட்டார இயக்க மேலாளர் காலியிடங்கள் எண்ணிக்கை: 2

இப்பணிப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டப்படிப்பு படித்த பெண்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேவையான தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office இல் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணினி படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதார்கள், 01.01.2023 அன்று  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வாழ்வாதார இயக்கம் துறை திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்படும்.

இதையும் வாசிக்க:  இந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்!

ஒப்பந்த காலம் நீட்டிக்கப்படும்:  தகுதியான நபர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்தகாலம் புதுப்பிக்கப்படும்.

top videos

    எனவே தென்காசி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 02.06.2023-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    First published:

    Tags: Jobs, Recruitment, Tamil Nadu Government Jobs