முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 615 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் அறிவிப்பு: தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

615 சப்-இன்ஸ்பெக்டர் காலியிடங்கள் அறிவிப்பு: தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

Tamil Nadu Direct Recruitment of 615 Sub-Inspectors post: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சார்பு ஆய்வாளர் (SI) பணிக்காலியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளர் (SI) பணிக் காலியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 615 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்களில், 20% இடங்கள்(எண்ணிக்கை- 123) பணியில் இருக்கும் காவலர்களுக்கும், 10% இடங்கள்( எண்ணிக்கை - 49) காவல்துறை வாரிசுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், 10% இடங்கள் (எண்ணிக்கை - 49) விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள், தலைமைக் காவலர்கள் 20% காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதேபோன்று, 10% வாரிசு இடஒதுக்கீட்டின் கீழ் பணியிலுள்ள, ஓய்வு பெற்ற மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2023 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது. அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றால் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் ஒதுக்கீடு:  பொது மற்றும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு :

வ.எண்விவரம்பொதுகாவல் துறை ஒதுக்கீடு
1.முதன்மை எழுத்துத் தேர்வு70 மதிப்பெண்கள்85 மதிப்பெண்கள்
2.உடல்திறன் தேர்வு15 மதிப்பெண்கள்விலக்கு அளிக்கப்பட்டது
3.நேர்முகத்தேர்வு10 மதிப்பெண்கள்10 மதிப்பெண்கள்
4.சிறப்பு மதிப்பெண்கள்05 மதிப்பெண்கள்05 மதிப்பெண்கள்
மொத்தம்100 மதிப்பெண்கள்100 மதிப்பெண்கள்

தமிழ் மொழி தகுதித் தேர்வு:

தமிழ் மொழி தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் (40%) பெற்றால் மட்டுமே தேர்வர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வு:

பகுதி (அ)-பொது அறிவு மற்றும் பகுதி (ஆ)-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), கருத்து பரிமாற்ற திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.

ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள் வழங்கப்படும், எழுத்துத் தேர்வுக்கான நேரம் 2 மணி 30 நிமிடங்கள் ஆகும். விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

உடல்திறன் போட்டி : (மொத்த மதிப்பெண்கள் -15)

(i) ஆண் விண்ணப்பதாரர்கள் :-

வ.எண்நிகழ்வுகள்ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1கயிறு ஏறுதல்5.0 மீட்டர்6.0 மீட்டர்
2நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல்நீளம் தாண்டுதல்3.80 மீட்டர்4.50 மீட்டர்
உயரம் தாண்டுதல்1.20 மீட்டர்1.40 மீட்டர்
3ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர்100 மீட்டர் ஓட்டம்15.00 வினாடிகள்13.50 வினாடிகள்
400 மீட்டர் ஓட்டம்80.00 வினாடிகள்70.00 வினாடிகள்

கயிறு ஏறுதல் மற்றும் நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்

(ii) பெண் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்கள்:

வ.எண்நிகழ்வுகள்ஒரு நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)இரு நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்)
1நீளம் தாண்டுதல்3.00 மீட்டர்3.75 மீட்டர்
2குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல்குண்டு எறிதல்4.25 மீட்டர்5.50 மீட்டர்
கிரிக்கெட் பந்து எறிதல்17 மீட்டர்24 மீட்டர்
3ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர்100 மீட்டர் ஓட்டம்17.50 வினாடிகள்15.50 வினாடிகள்
200 மீட்டர் ஓட்டம்38.00 வினாடிகள்33.00 வினாடிகள்

நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வுகளில் விண்ணப்பதாரர்களுக்கு 2 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

100 மீட்டர் ஓட்டம் (அ) 200 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

top videos

    விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 01.06.2023 முதல் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும். இத்தேர்விற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும்.

    First published:

    Tags: Recruitment, Tamil Nadu Government Jobs