முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் வேலை

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் வேலை

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் மூலமோ ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொன்னைம்

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

Tamil Nadu Government Jobs: கோவை மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் எதிர்வரும் 11ம் தேதி (11.06.2023) ஆகும்.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்வயதுகல்வித்தகுதிஒப்பந்த ஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்MBBSரூ.75,000/-
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்DGNM ( DiplomaIn General NursingMidwife )ரூ.14,000/-
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் (Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள்1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ரூ.6,000

மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் விவரம், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  இந்து அறநிலையத் துறை தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது நிபந்தனைகள்:

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 11.06.2023-ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு பட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

விண்ணைப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

இதையும் வாசிக்ககாஞ்சிபுரம் மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை.. என்னென்ன தகுதிகள் வேண்டும்?

விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் மூலமோ ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொன்னைம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்,  அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642 104 ஆகும்.

First published:

Tags: Jobs, Tamil Nadu Government Jobs