திருச்சி மாநகரில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் | கல்வித்தகுதி |
தட்டச்சர் | 1 | 18,500-58,600 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி2) அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல்.(i) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (Higher )(அல்லது)(ii) தமிழில் முதுநிலை ( Higher ) மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை(அல்லது)(iii) ஆங்கிலத்தில் முதுநிலை ( (Higher) மற்றும் தமிழிலில் இளநிலைகணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
உதவி மின் பணியாளர் | 1 | 16,600-52,400 | மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
காவலர் | 4 | 15,900-50,400 | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
பெருக்குபவர் | 1 | 15,900-50,400 | தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் |
தேர்வு முறையானது அடிப்படைக் கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்த பதவிக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஐம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 820006 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Tamil Nadu Government Jobs