முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை!

தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும்: அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Tamil nadu Government Jobs: மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி அலுவலகத்தில் இரவு காவலர் பொதுப்பிரிவு முன்னுரிமையற்ற (Open Competition-Non-Priority) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இக்காலியிடத்திற்கான கல்வித்தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமார் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 01.01.2023 அன்றைய நிலையில் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் (SC) ஆதிதிராவிட அருந்ததி இனத்தவர் (SCA) மற்றும் பழங்குடியின இனத்தவர்கள் 37 வயதுக்குள்ளும், பிற்பட்ட வகுப்பினர்(BC), மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் பிற்பட்ட முஸ்லீம் இனத்தவர் (BCM) 34 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் (OC) 32 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

எனவே, மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகத்தில் பெற்று கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: தேர்வு இல்லை.. மாதம் ரூ. 30,000 வரை சம்பளம்.. திருவள்ளூர் மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை!

விண்ணப்பத்துடன், தங்களது அனைத்துக் கல்விச் சான்றுகள் ஜாதிச்சான்று, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையான அட்டை ஆகியற்றின் ஒளிநகல்களுடன் மண்டல் இணை இயக்குநர்(வேலைவாய்ப்பு), மண்டல இணை இயக்கும் (வேலைவாய்ப்பு)அலுவலகம், வில்லியம்ஸ் ரோடு, மாவட்ட நிதிக்குழு வளாகம், திருச்சி, 620001 என்ற முகவரிக்கு 10.04.2023 மாலை 5.00 மணிக்குள் பதிவஞ்சல் மூவமாகவோ அவ்வது நேர வின்னப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

top videos
    First published:

    Tags: Tamil Nadu Government Jobs