ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 7 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பணியாற்றும் 221 தற்காலிக ஆசிரியர்களும், காலியாக உள்ள 194 பணியிடங்களுக்குத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களும் பயனடைவர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt teachers, Teachers