முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ் தெரிந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு..!

தமிழ் தெரிந்தால் போதும்... இந்து அறநிலையத் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு..!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை வேலைவாய்ப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 17.05.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழ்நாட்டில் உள்ள இந்து  திருக்கோயில்களை அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அற நிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில். திருப்பூர் மாவட்டம்,  காங்கேயம் வட்டம் , சின்னமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி  திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்எண்ணிக்கைசம்பள விகிதம்கல்வித்தகுதி
வழக்கு எழுத்தர்118,500 –58,600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்;
சீட்டு விற்பனை எழுத்தர்218,500 – 58,600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;
தட்டச்சர்118,500 – 58,600 payMatrix-22பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்;அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் ; தமிழிலில் இளநிலை கணினி பயன்பாடு மற்றும் Office Automation சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
காவலர்415900-50400 Pay Matrix-17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
தோட்டக்காரர்111600-36800 pay matrix-12தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
திருவலகு215900-50400 Pay Matrix - 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
கூர்க்கா115900 - 50400 Pay Matrix – 17தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
உதவி மின் பணியாளர்116600-52400 Pay Matrix -18மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வழங்கல் வாரியத்திடம் இருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். காவலர், தூய்மை பணியாளர் பணிகளுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பதாரர் 01.07.2022ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? இதற்கான விண்ணப்பப் படிவத்தை sivanmalaimurugan.hrce.tn.gov.in  மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 17.05.2023 மாலை 5.45 மணி. விண்ணப்பங்களை நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணியசுவாமி  திருக்கோயில், சிவன்மலை - 638701, காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

இதையும் வாசிக்கCOMPETITIVE EXAMS : போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு -3!

விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copy only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

top videos

    விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பபட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் , ரூ. 50/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Employment news, Hindu Temple