முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை.... உடனே அப்ளை பண்ணுங்க

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை.... உடனே அப்ளை பண்ணுங்க

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

இராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட, மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

Govt Jobs: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், இராணிப்பேட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காகத் பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்ப சேர்க்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் மே மாதம் 3ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் காவலர் பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பருவ கால பணி முற்றிலும் தற்காலிகமானது என்றும் நெல் கொள்முதல் பருவத்திற்கு மட்டும் பணியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
பருவகால பட்டியல் எழுத்தர்80ரூ.5,285+ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்குப் போக்குவரத்து படி-  ரூ.120
பருவகால காவலர்80ரூ.5,218+ரூ.3,499/-  (அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்குப் போக்குவரத்து படி-  ரூ.100

வயது வரம்பு :

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், 1.07.2022 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC/ BC(M), MBC/DNC ) மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்

கல்வித்தகுதி: பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டாயம் வாசிக்க:  சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

விண்ணப்பிக்கும் முறை:  இராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட, மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலர் அலுவலகம், நான்காவது A block, இராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில்  பெற்றுக் கொண்டு நேரடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.05.2022 மாலை 5 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs