முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

சிவகங்கை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு: 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பப் படிவத்தை சிவகங்கை மாவட்ட வலைதளமான http:/sivaganga.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பல்வேறு பணியிடங்களுக்கு பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்எண்ணிக்கைகல்வித் தகுதிசம்பளம்
ஆலோசகர்1சமூக பணியில், ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளம்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ரூ.18,000
பாதுகாவலர்1எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்ரூ.8,500
தர உள்ளீட்டாளர்4கணினி துறையில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும் (அல்லது) கணினி செயலி துறையில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்ரூ.13,500
பாதுகாப்பாளர்கள்2எட்டாம் வகுப்பு தேர்ச்சிரூ.8,500
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்4எட்டாம் வகுப்பு தேர்ச்சிரூ.8,500
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்1எட்டாம் வகுப்பு தேர்ச்சிரூ.8,500
பிசியோதெரப்பிஸ்ட்1பிசியோதெரப்பிஸ்ட்  படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்ரூ.13,000
மருத்துவமனை மேலாண்மை அலுவலர்1மருத்துவமனை நிர்வாகம்/ மருத்துவமனை மேலாண்மை/ பொது சுகாதார துறையில்  முதுநிலை பட்ட படிப்பு பெற்றிருக்க வேண்டும்.ரூ.60,000
OT Technician1அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் OT Technician படிப்பு முடித்திருக்க வேண்டும்ரூ. 15,000
Optometrists1அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் optometry படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்ட படிப்பு பெற்றிருக்க வேண்டும்ரூ. 14,000

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு சிவகங்கை மருத்துவமனை கல்லூரி, சிவகங்கை, தொலைபேசி எண்: 04575 - 243781

விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம் http:/sivaganga.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முதல்வர், அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 24-ம் தேதி 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மாலை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

top videos

    காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Tamil Nadu Government Jobs