முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SBI வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.41000 வரை சம்பளம்!

SBI வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.. மாதம் ரூ.41000 வரை சம்பளம்!

SBI-யில் 1031 காலிப்பணியிடம்… இப்போவே அப்ளை பண்ணுங்க!

SBI-யில் 1031 காலிப்பணியிடம்… இப்போவே அப்ளை பண்ணுங்க!

SBI Recruitment 2023 : பாரத ஸ்டேட் பேங்க் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. சம்பளம், தகுதி மற்றும் எப்படி அப்ளை செய்வது என இங்கே பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கித்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர் பதவிகளுக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்களை அழைத்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1031 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் நிரப்பப்படும். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30, 2023 ஆகும். இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி, சம்பள விவரம் மற்றும் பிற தகவலை தெரிந்து கொள்ள கீழே பார்க்கவும்.

காலிப்பணியிட விவரம் :

அறிவிப்பின்படி, சேனல் மேலாளர் உதவியாளர் (CMF-AC) பதவிக்கு 821 காலியிடங்கள் உள்ளன. சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் (CMS-AC) பதவிக்கு 172 மற்றும் துணை அதிகாரி (SO-AC) பதவிக்கு 38 காலியிடங்கள் உள்ளன. எஸ்பிஐ அல்லது வேறு ஏதேனும் அரசு வங்கி ஊழியர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் :

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி : ஏப்ரல் 1, 2023.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஏப்ரல் 30, 2023.

கல்வித்தகுதி :

பதவிகளுக்கு ஏற்றார் போல தகுதி வரம்புகள் வேறுபடுவதால், இங்கே கிளிக் செய்வதன் மூலம் தகுதி வரம்புகளை தெரிந்து கொள்ளலாம்.

Also Read | தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: ஊராட்சி அலுவலகத்தில் வேலை!

தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில், தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யப்படுவார்கள். இதையடுத்து, வங்கியால் அமைக்கப்பட்ட ஷார்ட்லிஸ்டிங் கமிட்டி, வங்கியால் தீர்மானிக்கப்பட்ட போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைப்பதற்கான வங்கியின் முடிவே இறுதியானது.

எவ்வளவு சம்பளம் கிடைக்கும் :

சேனல் மேலாளர் வசதியாளர் - ரூ . 36000

சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் - ரூ. 41000

உதவி அதிகாரி - ரூ. 41000

எஸ்பிஐ வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைப்பின் மூலம். தங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பிழை இல்லாமல் நிரப்பி சமர்ப்பிக்கவும். அப்ளை செய்வதற்கான நேரடி இணைப்பை பெற இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் (அசைன்மென்ட் விவரங்கள், அடையாளச் சான்று, வயதுச் சான்று, அனுபவம் போன்றவை) பதிவேற்றம் செய்யத் தவறினால், அவர்களின் விண்ணப்பம்/வேட்புத் தேர்வு சுருக்கப்பட்டியல்/நேர்காணலுக்கு பரிசீலிக்கப்படாது.

First published:

Tags: Bank Jobs, Job Vacancy, SBI, SBI Bank