மாணவிகள், பெண் ஆசிரியர்கள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சித் திட்டங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மகளிருக்காக நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டம் 03.07.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு மாதங்கள் நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சி திட்டத்தில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.
21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். தில்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள், பயிற்சியில் கலந்து கொள்ள தில்லி சென்று வருவதற்கான மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி ரயில் கட்டணங்கள் வழங்கப்படும்.
இதையும் வாசிக்க: இந்திய அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்: எந்த தேர்வும் இல்லை; உடனே விண்ணப்பியுங்கள்!
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கியத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்தப் பயிற்சித் திட்டம் நடத்தப்படுகிறது.
இதில் சேர விரும்புவர்கள் இந்த இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 29.05.2023 இரவு மணி 11.59 க்குள் சமர்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Recruitment