jobs in periyar university: சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் திட்டப்பணி உதவியாளர் (Project Assistant) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நுண்ணுயிரியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள்:
1. திட்டப் பணி உதவியாளர்- Project Assistant
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: நுண்ணுயிரியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், antinobacteria/ fermentation studies தொடர்பாக ஆராய்ச்சி அனுபவம் ஓராண்டு இருக்க வேண்டும். (M.Sc in Micro biology with one years of experience in the field of antinobacteria/ fermentation studies)
ஊதியம்: ரூ.20,000 +16% வீட்டுப் படி
பணிக் காலம் இரண்டு ஆண்டுகள். இது, முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும்.
மேற்கண்ட, பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவம், பெரியார் பல்கலைக்கழக இணைய தளத்தில் https://www.periyaruniversity.ac.in/ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான நபர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து எதிர்வரும் ஏப்ரல் 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: 12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 200 காலியிடங்கள்..!
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி rbalaguru@yahoo.com ஆகும். தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். periyar University Project Assistant walk in interview விண்ணப்பப் படிவத்தை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.