முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / இந்திய நாடாளுமன்றத்தில் வேலை: மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்... உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய நாடாளுமன்றத்தில் வேலை: மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்... உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம்

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Delhi, India

இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் (Parliamentary Interpreter) சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படம். எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மொத்த காலியிடங்கள்: 13  (சம்பள நிலை: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை) . இடஒதுக்கீடு முறையின் கீழ், பட்டியலின பிரிவினருக்கு 2 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 4 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 6 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1 இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(அல்லது)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து, குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, இந்தி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதை பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே பட்டியல் சாதிகள்/ பழங்குடி வகுப்பினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை உண்டு. இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மூன்றாண்டு வயது வரம்பு சலுகை உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். அரசு சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உள்ளது.

கட்டாயம் வாசிக்கபோஸ்ட் ஆபிஸில் வேலை... 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்... மிஸ் பண்ணாதீங்க..!

தேர்வு முறை: இந்த பதவிகளுக்கான தேர்வு முறை 4 நிலைகளைக் கொண்டது. சொற்பொழிவு (Oration test), எழுத்துத் தேர்வு (Written test), மொழிபெயர்ப்பு தேர்வு (Simultaneous Interpretation Test) , நேர்காணல் தேர்வு (Personal Interview) ஆகிய நான்கு அடுக்குகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

Parliamentary Interpreter Recruitment Notification

top videos

    விண்ணப்பம் செய்வது எப்படி? ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://loksabha.nic.in/ → Recruitment → Apply Online என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Central Government Jobs, Parliament, Recruitment