முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / எந்த தேர்வும் இல்லை... 8வது தேர்ச்சி பெற்றால் அரசு நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

எந்த தேர்வும் இல்லை... 8வது தேர்ச்சி பெற்றால் அரசு நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

Karur District Job alert | ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  • Last Updated :
  • Karur, India

Karur District Job alerts: கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிட எண்ணிக்கை: 1

இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (non- priority) வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 10.5.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 107/1, நவலடியாள் காம்பளக்ஸ் முதல் தளம், அண்ணா நகர், தான்தோன்றிமலை, கரூர்- 639 005.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி உதவி சிறை அலுவலர் தேர்வு: விண்ணப்பிக்க இரண்டு நாட்களே உள்ளன

top videos

    உரிய முறையில் சுய சான்றொப்பமிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் ஆவணங்களை அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு குறித்த தகவல் தபால் மற்றும் அலைபேசி எண் (அ) மின்னஞ்சல் (அ) வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கப்படும்.

    First published:

    Tags: Government jobs, Recruitment, Tamil Nadu Government Jobs