முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

 • Last Updated :
 • Tamil Nadu |

கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில்(OSC) தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மையநிர்வாகி ( Center Admin): காலிப்பணியிடம் -1

 • மையநிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். முதுநிலை சமூகப் பணி, வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை உளவியல், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

பதவி - முதுநிலை ஆலோசகர்(Senior Counselor); காலிபணியிடம்-1

 • முதுநிலை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 • முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், பட்டம் பெற்றிருக்க வேண்டும்
 • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும்

பதவி - வழக்குப் பணியாளர்(Case Worker); காலிபணியிடம்-1

 • வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
 • முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 • பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 • ரூ.15,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

top videos

  தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 28.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு கிடைக்குமாறும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இப்பதவிக்கான மாதிரி விண்ணப்பம் கரூர் மாவட்ட இணையதளத்தில் https://karur.nic.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

  First published:

  Tags: Tamil Nadu Government Jobs