முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்... ரூ. 39,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்... ரூ. 39,000 சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

அகத்தீஸ்வர சுவாமி கோயில்

அகத்தீஸ்வர சுவாமி கோயில்

சென்னையில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ரூ.39 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் ஓதுவார் பணிக்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்பணியிடம்ஊதியம்
ஓதுவார்1ரூ.12,600 - 39,900

கல்வித்தகுதி:

தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். சமய, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் தேவாரப் பாட சாலையில் 3 ஆண்டுகள் பயின்றமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் மூலம் பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடையவர்கள், கோயில் நிர்வாகத்திடம் இருந்து விண்ணப்பங்களை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்துடன் இணைத்து கல்வி சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

Also Read : மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.06.2023 மாலை 5.45 மணிக்குள் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்துசேர வேண்டும்.

top videos

    மேலும் விவரங்கள் இங்கே கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Hindu Endorsements Dept, Hindu Temple, Tamil Nadu Government Jobs