கேரளாவிலுள்ள Indian Naval Academy-இல் காலியாக உள்ள 242 பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி (Short Service Commission) வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள் :
பணியின் பெயர் | பணியிடங்கள் | பிறந்த வருடம் |
General Service | 50 | 02 Jan 1999 to01 Jul 2004 |
Air Traffic Controller | 10 | 02 Jan 1999 to01 Jan 2003 |
Naval Air OperationsOfficer | 20 | 02 Jan 2000 to01 Jan 2005 |
Pilot | 25 | 02 Jan 2000 to01 Jan 2005 |
Logistics | 30 | 02 Jan 1999 to01 Jul 2004 |
Naval ArmamentInspectorate Cadre | 15 | 02 Jan 1999 to01 Jul 2004 |
Education | 12 | 02 Jan 1999 to01 Jan 2003 |
Engineering Branch | 20 | 02 Jan 1999 to01 Jul 2004 |
Electrical Branch | 60 | 02 Jan 1999 to01 Jul 2004 |
கல்வித்தகுதி :
BE/B.Tech பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கல்விப்பிரிவு பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.56,100 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்குத் தேர்வு செய்யும் முறை மூன்று பகுதிகளாக நடைபெறும். முதலில் விண்ணப்பதார்களின் படிப்பை பொறுத்து தேர்வு செய்யப்படுவர். அதனைத்தொடர்ந்து, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். எஸ்எஸ்சி மூலம் பணி அமர்த்தப்படுபவர்கள் 10 ஆண்டுகள் காலங்கள் பணியாற்ற வேண்டும். மேலும் பணி திறமையைப் பொருத்து 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.
Also Read : ரூ. 50,000க்கும் அதிகமாக சம்பளம்... தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு..!
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14/03/2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.