Latest Govt Jobs alert: தூத்துக்குடி மாவட்டம், கருங்களம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதிக்குள், விண்ணப்பப் படிவத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச் சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரத்தை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர்: 1 ( இனசுழற்சியின் அடிப்படையில் பட்டியல் கண்ட சாதியினர். ஆதரவற்ற பெண் விதவை முன்னுரிமை)
இரவுக் காவலர்: 1 (பொதுப் பேட்டி - General Turn)
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர், ஜீப்பு ஓட்டுநர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரவுக்காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
சம்பள நிலை: உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும். இரவுக் காவலர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? இந்த காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை கருங்களம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளம் thoothukudi.nic.in வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், கருங்களம் - 628 809, தூத்துக்குடி மாவட்டம், தொலைபேசி எண்- 04630 263225 என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 24ம் தேதி முதல் மாலை 5.45 மணி வரைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டாயம் வாசிக்க: 8-ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை
பொது நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பவேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இசுைழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்,
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தாரித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதார் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
சுய முகவரியுடன் கூடிய ரூ. 25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.