தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 11ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. மற்றத் துறை தேர்வுகள் போல் அல்லாமல், இந்த தேர்வுக்கு ஏதேனும் டிகிரி பட்டம் படித்திருந்தால் போதுமானது. மேலும், இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அறிந்த ஒன்றாக இருப்பதால், மேற்படி தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, அரசு போட்டித் தேர்வுகளை தங்கள் கனவாக கொண்ட தேர்வர்கள் இந்த பதவிக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்களின் எண்ணிக்கை: உதவி சிறை அலுவலர்: ஆண்கள்(54), பெண்கள் (5)
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01.07.2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.
சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,30,400 வரை சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது (Level-11)
உடற்கூறு தகுதிகள்: அரசால், அரசு மருத்துவ நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தரத்திற்கு மேற்பட்ட மருத்துவ அலுவலரிடமிருந்து , உடற்கூறு அளவீடு சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, போதிய கால அவகாசம் இருக்கும் போதே அருகில் உள்ள மருத்துவ அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், பணியிட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டம்: எழுத்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் கூடிய மாநில நிர்வாகம், சமூக பொருளாதார பிரச்னைகள், தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள், மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில், தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேலைவாய்ப்பு அறிவிக்கையை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Recruitment, Tamil Nadu Government Jobs, TNPSC