முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ. 50,000 வரை சம்பளம்... குதிரை பராமரிப்பாளர் வேலை... சென்னை காவல்துறையில் வேலை..!

ரூ. 50,000 வரை சம்பளம்... குதிரை பராமரிப்பாளர் வேலை... சென்னை காவல்துறையில் வேலை..!

காட்சிப் படம்

காட்சிப் படம்

குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்து செல்ல வேண்டும்

  • Last Updated :
  • Tamil Nadu |

குதிரை பராமரிப்பாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை  பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரைப் படையில் கீழ்காணும் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்குதிரை பராமரிப்பாளர்
காலியிடம்10
ஊதிய விவரம்புதிய ஊதியப்படை நிலை ரூ. 15,700 முதல்  50,000 வரை
வயது  31.03.2023  அன்றுள்ளபடி18 - 30 க்குள் இருக்க வேண்டும்பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் :32ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்: 35
கல்வி தகுதிதமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி03.04.2023 மாலை 5.00 மணி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகுதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம்,  சென்னை பெருநகர காவல்,                                                       வேப்பேரி, சென்னை -7
அசல் சான்றிதழ்களை  சரிபார்க்கும் நாள் மற்றும் இடம்17. 04.2023 நேரம் காலை 07.00 மணிஇடம்: ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், ருக்குமணி இலட்சுபதி சாலை ( மார்ஷல் சாலை), எழும்பூர், சென்னை-08

நிபந்தனைகள்: ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் . விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

ஒரு வெள்ளைத் தாளில் மேற்படி விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

குதிரை பராமரிப்பாளர்களின் வேலைகள் கீழ்க்கண்டவாறு

1. தினமும் காலை 4.30 மணிக்கு அறிக்கை ( Report) செய்ய வேண்டும்.

2. குதிரைகளை எழுப்ப வேண்டும்.

3. குதிரைகள் படுத்திருந்த வைக்கோல்களை அகற்ற வேண்டும்.

4. குதிரை லாயத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

5. குதிரைகளின் சாணங்களை அதற்குரிய இடத்தில் கொண்டு போய் நிரப்ப வேண்டும்.

6. குதிரைகளின் உடம்பிலுள்ள அழுக்குகளை சுத்தம் செய்தல் வேண்டும்.

7. குதிரைகளுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை இடைவெளிவிட்டு தீவணம் வைக்க வேண்டும்.

8. குதிரைகளுக்கு லாடம் கட்டும் பொழுது லாடம் கட்டுபவருக்கு உதவி செய்ய வேண்டும். அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும்

9. குதிரைகளை கால்நடை மருத்துவமனைக்கு மாதந்தோறும் ஒரு முறையும் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அழைத்து செல்ல வேண்டும். குதிரை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டால் உடனிருந்து கவனிக்க வேண்டும்.

10. குதிரைகளுக்கு அதற்குரிய நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும்.

11. பணிக்குச் சென்று திரும்பும் குதிரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

12. மூன்று நாட்களுக்கு ஒரு முறை குதிரைகளை குளிக்க வைக்க வேண்டும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs