முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் தொழிற்பயிற்சி: இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் தொழிற்பயிற்சி: இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்

என்ஏடிஎஸ் இணையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 15.04.2023. பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2023 ஆகும்

  • Last Updated :
  • Tamil Nadu |

டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கான ஓராண்டு கால  தொழிற் பழகுநர் பயிற்சியை  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி  தொழிற் பழகுநர்: 

துறைஎண்ணிக்கைகல்வித் தகுதிமாதாந்திர உதவித்தொகை
சிவில்/மெக்கானிக்கல் என்ஜினியரிங்52தொடர்புடைய துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்9000/-
எலெக்ட்ரிக்கல்/எலெக்ட்ரானிக்ஸ்24தொடர்புடைய துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்9000/-
மொத்தம்76

தொழில்நுட்ப டிப்ளோமா பயிற்சி 

துறைஎண்ணிக்கைகல்வித் தகுதிமாதாந்திர உதவித்தொகை
சிவில்/மெக்கானிக்கல் என்ஜினியரிங்10தொடர்புடைய துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்8000/-
எலெக்ட்ரிக்கல்/எலெக்ட்ரானிக்ஸ்22தொடர்புடைய துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம்  டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும்8000/-
மொத்தம்32தொடர்புடைய துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம்  டிப்ளமோ  பெற்றிருக்க வேண்டும்

தேசிய பயிற்சி பெறுவோருக்கான பயிற்சித் திட்டம் (National Apprenticeship Training Scheme (NATS) என்ஏடிஎஸ்) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள், இந்த பயிற்சியில் கலந்து கொள்ள  'CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

இதையும் வாசிக்க: ஏதாவது ஒரு டிகிரி தகுதி போதும்: மத்திய அரசு நிறுவனத்தில் 2,859 காலியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்கள்!

top videos

    ஏற்கனவே, பதிவு செய்யாத மாணவர்கள் என்ஏடிஎஸ் இணைய தளத்திற்கு சென்று, உறுப்பினராக பதிவு செய்து கொள்ள (Enroll) வேண்டும்.  பிறகு, பதிவு எண் மூலம் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். என்ஏடிஎஸ் இணையத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 15.04.2023. பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2023 ஆகும்.

    First published:

    Tags: Recruitment, Tamil Nadu Government Jobs