முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஆவின் வேலைவாய்ப்பு 2023: ரூ.43,000 சம்பளத்தில் வேலை... வெளியான அசத்தல் அறிவிப்பு

ஆவின் வேலைவாய்ப்பு 2023: ரூ.43,000 சம்பளத்தில் வேலை... வெளியான அசத்தல் அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Aavin Vellore Recruitment 2023: வரும் 24ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore |

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்:கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை5
கல்வித் தகுதிகால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம்ஓராண்டு
கூடுதல் நிபந்தனைகள்கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்
சம்பளம்ரூ. 43,000

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி காலை 11 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம். நேரடி தேர்வு நடைபெறும் இடம்: வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்-9. தொலைபேசி எண். 9345161677 ஆகும்.

இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs