இந்தியாவில் 3ல் ஒரு இளைஞர் (15 - 24 வயது) எந்தவித கல்வியையும். வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும் கொண்டிருக்க வில்லை என்று இந்திய அரசின் பலமுனை கணக்கெடுப்பு குறியீடு (Multiple Indicator Survey (MIS)) தெரிவித்துள்ளது.
முன்னதாக, நிலையான வளர்ச்சி ( sustainable development Goals) மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்த MIS கணக்கெடுப்பை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மேற்கொண்டது. MIS கணக்கெடுப்பின் இந்த 78வது சுற்று, முதலில் 2020 ஜனவரி-டிசம்பர் காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக களப்பணி 2021 ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதிலும் இருந்து 11 லட்சத்துக்கும் அதிகமானோரிடமிருந்து (11,63,416) தகவல்கள் பெறப்பட்டன.
குடும்பங்களின் செலவீனங்கள், வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம், வீடுகளில் எரிபொருள் பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிப்பறை வசதி, 31.03.2014க்குப் பிந்தைய தேதியில் கட்டப்பட்ட வீடுகள், 15 - 24 வயது இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சமூக பொருளாதார நிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டன.
அதன்படி, அகில் இந்திய அளவில் 3ல் ஒரு இளைஞர் (15 - 24 வயது) எந்தவித கல்வியையும். வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும் கொண்டிருக்க வில்லை (Percentage of persons of age 15-24 years not in education, employment or training (NEET) as on date of survey) என்று இந்திய அரசின் பலமுனை கணக்கெடுப்பு குறியீடு தெரிவித்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த NEET பிரிவு இளைஞர்களின் விகிதம் 30.2% ஆகவும், நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 27.0, அகில இந்திய அளவில் 29.3% ஆகவும் உள்ளன.
பால் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள்: குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பால்ரீதியான கற்பொழுக்கம் காரணமாக பெண்களிடையேயான தொழிலாளர் நகர்வு (Labour Mobility) ஒப்பீட்டு அளவில் குறைவாகக் காணப்படுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சமீபத்திய ஆய்வும் இதனை உறுதி செய்துள்ளது.
அதில் இந்திய அளவில் எந்தவித கல்வியையும், வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும் கொண்டிராத (NEET) பெண்களின் எண்ணிக்கை 51.7 % ஆகவும், ஆண்களின் எண்ணிக்கை 15.4% ஆகவும் உள்ளது. மேலும், இந்த NEET பிரிவில் உள்ள பெண்களில் 90% பேர் குடும்ப வேலைகளில் தங்களை ஈடுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஆண்களில் வெறும் 7.5% பேர் மட்டுமே, குடும்பப் பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்க: ஏதாவது ஒரு டிகிரி தகுதி போதும்: மத்திய அரசு நிறுவனத்தில் 2,859 காலியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்கள்!
மாநிலங்கள் வாரியாக உத்தரபிரதேசத்தில், மிகவும் குறைவாக பெண்களிடையேயான தொழிலாளர் நகர்வு காணப்படுவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 3ல் 2 (அதாவது 60% ) பெண்கள் எந்தவிதமான கல்வியையம், வேலைவாய்ப்பையும், தொழிற்பயிற்சியையும். அடுத்த இடமாக ,மேற்கு வங்க மாநிலத்தில் கிட்டத்தட்ட 58.6% பெண்கள் எந்தவித தொழிலாளர் நகர்வையும் கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் 2ல் 1 பெண் (அதாவது 49.8%) எந்தவித தொழிலாளர் நகர்வையும் கொண்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, Recruitment