கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக தர மேலாளர்(Quality Manager) காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடம் : தர மேலாளர் (Quality Manager)
வயது வரம்பு : 45 வயது வரை
மாத ஊதியம் : ரூ. 60,000/-
கல்வித் தகுதி: அவசியம் விண்ணப்பதாரர் பொது சுகாதாரம்/மருத்துவமனை நிர்வாகத்தில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விரும்பத்தக்கது: NABH/ISO/98001:2008/Six/Sigma/Lean/Kaizen போன்ற முறையான தர அமைப்பின் சுகாதாரப் பாதுகாப்பு தரத்தில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.04.2023 மாலை 05.00 மணி
நேர் காணல் நடைபெறும் நாள் : 24.04.2023 காலை 10.00 மணி. தகுதியுள்ள நபர்கள் வரும் 21.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள்:
1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.
3. பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
4. காலி பணியிட விவரம் மாறுதலுக்குட்பட்டது.
இதையும் வாசிக்க: நேர்காணல் மட்டுமே உண்டு... ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை
விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை சிங்காநல்லூர், கோவை மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தில் 21.04. 2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.