முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசின் இந்த செய்தி உங்களுக்குத் தான்

தொழில் தொடங்க திட்டமிடுகிறீர்களா? அரசின் இந்த செய்தி உங்களுக்குத் தான்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு GST and E-way Billing (Advance) அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

  • Last Updated :
  • Tamil Nadu |

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு  (GST and E-way Billing (Advance) குறித்து இணையவழி பயிற்சி வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு , அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும். இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

03.05.2023 தேதி முதல் 05.05.2023-ம் தேதி வரை  3 நாட்கள் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: ரூ. 1 லட்சம் வரை மாதச் சம்பளம்

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்(திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600032 ஆகும்.

top videos
    First published:

    Tags: Entrepreneurship