முகப்பு /employment /

இன்னும் 2 நாள் தான் இருக்கு.. நாகர்கோவில் அரசு கல்லூரியில் சேர இதுவே கடைசி நாள்!

இன்னும் 2 நாள் தான் இருக்கு.. நாகர்கோவில் அரசு கல்லூரியில் சேர இதுவே கடைசி நாள்!

X
நாகர்கோவில்

நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

Nagercoil | நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 19 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Nagercoil, India

நாகர்கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 19ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நமது நியூஸ்18 உள்ளூருக்கு நாகர்கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி கூறியதாவது, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசின் உயர்கல்வி துறை வழிகாட்டுதலின் படி திட்டமிடப்பட்டு நடைபெறுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்aபு தேர்வு முடிவுகள் வெளியானது முதல் 8/5/2023 - 19/5/2023 வரை நாகர்கோயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணையதளத்தில், இங்கு பயில விரும்பும் மாணவர்கள் தங்கள் தகவல்களை பதிவு செய்து வருகிறார்கள். மாணவர் சேர்க்கை பதிவு கட்டணம் 50 ரூபாய் மட்டும் SC/STமாணவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது.

மேலும் 25/5/2023 அன்று சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 30/5/2023 வணிகவியல் மற்றும் ஆங்கிலம் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறும். 31/5/2023 அன்று கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், உயிரியல், மற்றும் புள்ளியியல் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதேபோல, பொருளியல் வரலாறு தமிழ் வணிக நிர்வாகவியல் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று கூறினார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Admission, College Admission, Kanniyakumari, Local News, Nagercoil