முகப்பு /employment /

குமரியின் முதல் பெண்கள் கல்லூரி..! இங்கு இத்தனை பாடப்பிரிவுகள் உள்ளதா..!

குமரியின் முதல் பெண்கள் கல்லூரி..! இங்கு இத்தனை பாடப்பிரிவுகள் உள்ளதா..!

X
ஹோலி

ஹோலி கிராஸ் கல்லூரி

Kanniyakumari Holy Cross College : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஹோலி கிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ள பாடப்பிரிவுகள் பற்றி பார்க்கலாம்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் கல்லூரி பெண் கல்வியை வழங்கும் நோக்கில் 1965ல் தொடங்கப்பட்டு குமரியின் முதல் பெண்கள் கல்லூரி என்ற சிறப்புடனும் தேசியத் தரமதிப்பீட்டுக் குழுவின் A+ தகுதியுடனும் செயல்படுகிறது என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் சகாய செல்வி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தேசியத்தர மதிப்பீட்டுக்குழு 5 முதல் 17 வருடங்களுக்கு ஒருமுறை 7 அளவுகோல்களின் அடிப்படையில் (7 Criterias) கல்லூரிகளை ஆய்வு செய்து தரச்சான்றினை வழங்குகிறது. முதல் அளவுகோல் (Criteria: 1 - Cumicalun Aspects) உலகளாவிய, தேசிய வட்டார அளவிலான பாடத்திட்ட வடிவமைப்பு, அப்பாடத்திட்டத்தின் வழி, தொழில்முனைதல், நன்திறன்மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பினை வழங்குதல்.

(Cileria II - Tenching Loaming; (Evaluatice) தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன கற்றல் முறை. (Cntima II - Research, Innovation. Extersion) ஆய்வு செயல்பாடுகள் (Scopus, Web of Scienice, பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தல்) (Criteria IV - Infrestrictice & Loarming Resvera) உட்கட்டமைப்பு, கற்றலுக்கான இணைய தளங்கள், (Crihtrian V Student Support & Progression) மாணவியருக்கான வேலைவாய்ப்பு, உயர்படிப்புகள், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி. (Criharia VLE Gvermante) கல்லூரியின் நிர்வாகத் திறன், தலைமைத்துவம், (Criteria VII - Best Practees) சுற்றுச்சூழல், மறிப்பீடுகள், சிறப்புச் செயல்பாடுகள் என்பதாகும். நிர்ணயிக்கப்பட்ட கோல்களிலும் எம் கல்லூரி சிறந்து விளங்கி A+ தகுதியை பெற்றுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் தொழில் முனைதலில் எம் கல்லூரியின் பங்களிப்பினைப் பாராட்டி 4 நட்சத்திர அந்தஸ்தை வழங்கியுள்ளது. குமரியில் இந்த கல்லூரிக்கு மட்டுமே இவ்வங்கீகாரத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. Education World அமைப்பு நடத்திய தன்னாட்சி கல்லூரிகளுக்கான தரவரிசை தேர்வில் தமிழக அளவில் 12வது இடத்தையும், இந்திய அளவில் 26வது இடத்தையும் பெற்றுள்ளது.

ஹோலி கிராஸ் கல்லூரி

(தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், தரமான பாடத்திட்டங்கள். பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவியர் பெற்ற வேலைவாய்ப்புகள். உள்கட்டமைப்பு, நிர்வாகத்திறன், போன்றவற்றின் அடிப்படையிலேயே இத்தரவரிசைத்தேர்வு நடத்தப்படுகிறது. 2020-2023ம் கல்வியாண்டில் எமது கல்லூரி 23 புத்தொழில்களை (Startups) உருவாக்கியுள்ளது.8 காப்புரிமைகளையும் பெற்றுள்ளது. 300 மாணவியர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நடத்திய நேர்முகத்தேர்வில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பெண்களே இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் உஷாரா இருங்க..? எச்சரிக்கை விடுக்கும் நெல்லை மருத்துவர்..!

மாணவியர் சோர்வின்றிப் புத்துணர்வுடன் கல்வி பயில முழுநேர பகுதிநேர உளவியல் நிபுணர்கள் பணிபுரிகின்றனர். பாதுகாப்பான விடுதி வசதியுடன் விடுதி மாணவியரின் ஆளுமை, தனித்துவம் மற்றும் பல்திறன் வளர்க்கும் நோக்கில் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், SIT/NET பயிற்சிகள், முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பயிற்சிகள் (Intermahip) எனப் பல்வேறு வாய்ப்புகளை மாணவியருக்கு வழங்கி வருவதுடன் தூய்மையான, பசுமையான வளாகத்தைக் கொண்டு கல்விச் சேவையை ஆற்றி வருகிறது.

அரசு உதவிபெறும் இளங்கலைப் பாடப்பிரிவுகள் : B.Sc. கணிதம் , B.Sc. இயற்பியல் , B.Sc.வேதியியல் B.Sc. விலங்கியல் ,B.Sc. தாவரவியல் , B.A.ஆங்கில இலக்கியம் , B.A.வரலாறு , B.A.பொருளியல் (Economics) , B.Com வணிகவியல் (Commerce) அரசு உதவிபெறும் முதுகலைப் பாடப்பரிவுகள் , M.Sc. கணிதம் M.Sc.இயற்பியல் , M.Sc. விலங்கியல் , M.A.ஆங்கில இலக்கியம்

சுயநிதி இளங்கலைப் பாடப்பிரிவுகள் : B.Sc கணிதம் , B.Sc. கணினி அறிவியல் , B.A.ஆங்கில இலக்கியம் , B.A. தமிழ் இலக்கியம் , B.Com. வணிகவியல் (Commerce) , B.Sc. ஆடை வடிவமைப்பு (Costume and Fashion Designing).

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முதுகலைப் பாடப்பிரிவுகள் : M.Sc கணிதம் , M.Sc. வேதியியல் , M.Sc.தாவிரவியல் , M.Sc.விலங்கியல் M.Sc. கணினி அறிவியல் , M.A.ஆங்கில இலக்கியம் , M.A.வரலாறு M.Com. வணிகவியல் M.S.W.சமூகப் பணித்துறை" என்று தெரிவித்தார்.

First published:

Tags: Education, Kanniyakumari, Local News