முகப்பு /employment /

நாகர்கோவில் அரசு கல்லூரியில் சர்வதேச வணிகவியல் கருத்தரங்கம்.. பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பு!

நாகர்கோவில் அரசு கல்லூரியில் சர்வதேச வணிகவியல் கருத்தரங்கம்.. பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்பு!

X
நாகர்கோவில்

நாகர்கோவில் அரசு கல்லூரியில் சர்வதேச வணிகவியல் கருத்தரங்கம்

International Business Seminar at Nagercoil Government College | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக, பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்ற வணிகவியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்ற வணிகவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பிரகாசி அருள் ஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய வணிகவியல் புத்தகம் வெளியிடப்பட்டது.

பின்னர் முனைவர். யூஜின் பிரகாஷ் பத்ரோஸ் அவர்கள், பின்டெக் பைனான்சியல் என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கை திறம்பட நடத்தி அது தொடர்பான பல்வேறு அறிய தகல்வல்களையும் விளக்கி பேசினார். வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் G.சுசிலா அவர்கள் நன்றியுரை வழங்க கருத்தரங்கின் முற்பகுதி நிறைவு பெற்றது.

இதையும் படிங்க : மருத்துவ திரவங்களை கண்காணிக்கும் கருவி..! கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தல்..!

கருத்தரங்கின் 2ம் பகுதியில், டிராய் பல்கலைக் கழக மேலாண்மைத் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் ரஸ்கின் சிறப்பான கருத்துரைகள் வழங்க ஆய்வகக் கட்டுரைகள் சமர்பிக்கும் பகுதிக்கு தலைமை தாங்கினர். அதனைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

நாகர்கோவில் அரசு கல்லூரியில் சர்வதேச வணிகவியல் கருத்தரங்கம்

இத்ந கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்லவேறு மாநிலங்களில் இருந்தும், அல்லாந்து, துபாய், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, போன்ற பிற நாடுகளில் இருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கருத்தங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக, கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் கூறினர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு கல்லூரி முதல்வர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    First published:

    Tags: Kanniyakumari, Local News