முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / COMPETITIVE EXAMS : போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு- 4 !

COMPETITIVE EXAMS : போட்டி தேர்வுகளுக்கான நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு- 4 !

நவம்பர் மாத செய்திகள்

நவம்பர் மாத செய்திகள்

ISRO வின் RH-200 சவுண்டிங் ராக்கெட் 200வது தொடர்ச்சியான வெற்றிகர ராக்கெட் சோதனையை நிறைவு செய்துள்ளது

  • Last Updated :
  • Chennai |

TNPSC , UPSC, SSC, ரயில்வே தேர்வு என்று பலதரப்பட்ட தேர்வுகளுக்கு நிறைய பேர் தயாராகிக்கொண்டு இருப்பீர்கள். எல்லா தேர்வுகளிலும் பொதுவாக வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள் இருக்கும். இது போன்ற பொதுவான படங்களை தினமும் கொஞ்சம் திருப்புதல் செய்ய ஏதுவாக நங்கள் தொகுத்து தர இருக்கிறோம். அந்த வகையில் இன்று நடப்பு நிகழ்வுகளை பற்றி பார்க்க இருக்கிறோம்.

போட்டி தேர்வுகளை பொறுத்தவரை தேர்வர்கள், படிக்கும் பாடங்களில் மட்டும் அல்லாது தினசரி தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காகவே தேர்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நடப்பு நிகழ்வுகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் வரவுள்ள நிலையில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரையான நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்திருப்பது முக்கியம்.

அதனால் இந்த தொகுப்பில் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த சில முக்கிய "சுற்றுசூழல், அறிவியல்  " சார்ந்த நடப்பு நிகழ்வுகளை விரிவாக பார்ப்போம். இது உங்கள் தேர்வுக்கு முக்கிய குறிப்புகளாக அமையும். செய்தியில் வந்த முக்கிய இடங்கள் மற்றும் தகவல்களை பார்ப்போம்.

பழுதுபார்க்கும் உரிமை-RIGHT TO REPAIR

  • ஏன் செய்தியில் இருந்தது ?
  • மக்கள் வைத்துக்கும் மின்சார மற்றும் மின்னணு சாதனங்களை பழுதுபார்க்க  ஒருங்கிணைந்த தேசிய போர்டல் ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

  • LiFE (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) இயக்கம் 2021  இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற  26வது காலநிலை மாற்ற மாநாட்டில் தொடங்கப்பட்டது. இதை நம் இந்திய பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
  • இந்த இயக்கத்தின் மூலம் நம் வாழ்க்கை முறை இயற்கைக்கு ஏற்படுத்தும் பாதிப்பதை குறைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். அப்படி வாழும் மக்கள்
  • வாழ்க்கை முறை "ப்ரோ-பிளானட் பீப்பிள் (P3)" என்று அழைக்கப்படுகிறது.

  • இதன் முதல் படியாக பழுதடைந்த மின்சார மற்றும் மின்னணு பொருட்களுக்கு பதிலாக புதிய பொருட்களை வாங்காமல், அதே பொருளை பழுது பார்த்து பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டுவர நுகர்வோர் விவகார அமைச்சகம் (MoCA) ‘ரிப்பேர் செய்வதற்கான உரிமை (RTR)’ கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.
  • இதற்காக சாம்சங், பிலிப்ஸ் போன்ற பிராண்ட் கையேடுகள், பழுதுபார்ப்பு கட்டணங்கள், சேவை மையங்கள் மற்றும் மாற்றியமைக்கும் செலவுகளை பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்க ஒற்றை-சாளர போர்ட்டல் வெளியிடப்பட உள்ளது.
  • இதனால் மக்கள் தங்கள் பொருட்களை எளிதாக பழுது பார்த்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் (BHS):

ஏன் செய்தியில் இருந்தது ?

தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி மற்றும்  மீனாட்சிபுரம் கிராமங்களை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவித்தது.

  • BHS என்பது பின்வரும் கூறுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை உள்ளடக்கிய வளமான பல்லுயிர்த்தன்மை கொண்ட தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளாகும்:
  • காட்டு மற்றும் வளர்ப்பு இனங்கள் அல்லது உள்-குறிப்பிட்ட உயிரினங்களின் செழுமை.
  • உயர் எண்டெமிசம்.
  • அரிதான மற்றும் அச்சுறுத்தப்பட்ட இனங்கள், கீஸ்டோன் இனங்கள் மற்றும் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த இனங்கள் இருப்பது.
  • உள்நாட்டு/பயிரிடப்பட்ட இனங்கள் அல்லது அவற்றின் வகைகளின் காட்டு மூலங்கள்.
  • புதைபடிவ படுகைகள் மற்றும் குறிப்பிடத்தக்க கலாச்சார, நெறிமுறை அல்லது அழகியல் விழுமியங்களைக் கொண்ட உயிரியல் கூறுகளின் கடந்தகால முன்னோடி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பேணுவதற்கு முக்கியமானது.

  • இந்த இடங்களை உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002 இன் பிரிவு-37 இன் கீழ், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை BHS என அறிவிக்கலாம்.
  • மாநில அரசு, மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, BHS இன் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்கான விதிகளை உருவாக்கலாம்.
  • BHS இன் உருவாக்கம், உள்ளூர் சமூகங்கள் தானாக முன்வந்து முடிவு செய்ததைத் தவிர, நடைமுறையில் உள்ள நடைமுறைகள் மற்றும் பயன்பாடுகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது.

  • BHS அறிவிப்பின் நோக்கம், அத்தகைய தளங்களைப் பாதுகாப்பதன் மூலம் உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும்.
  • 2007 ஆம் ஆண்டில், கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள நல்லூர் புளி தோப்பு இந்தியாவின் முதல் BHS ஆக நியமிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நவம்பர் மாத முக்கிய நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு -3!

ரோகிணி 200 ராக்கெட் (RH 200)

  • ISRO வின் RH-200 சவுண்டிங் ராக்கெட் 200வது தொடர்ச்சியான வெற்றிகர ராக்கெட் சோதனையை நிறைவு செய்துள்ளது.
  • வானிலை, வானியல் மற்றும் ஒத்த கிளைகளான விண்வெளி இயற்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சவுண்டிங் ராக்கெட்டுகள் சோதனைகள் மேற்கொள்ளப் படுகிறது.

  • இந்தியாவில் இருந்து 1963 இல் அமெரிக்க நைக்-அப்பாச்சி என்ற  முதல் சவுண்டிங் ராக்கெட் ஏவப்பட்டது.
  • அதன் பின்னர் 1967 இல்  இஸ்ரோ தனது சொந்த பதிப்பான ரோகினி RH-75 ஐ அறிமுகப்படுத்தி சோதனை செய்தது.
  • அதே வரிசையில் வந்த  RH 200 என்பது திடமான மோட்டார் மூலம் இயங்கும்  ராக்கெட் ஆகும். மேல் வளிமண்டலத்தைப் படிக்க வடிவமைக்கப்பட்ட பேலோடுகளுடன்  70 கிமீ உயரம் வரை ஏறும் திறன் கொண்டது.
top videos

    First published:

    Tags: Competitive Exams, Exam preparation